Monday, August 18, 2008

மு.ராமசாமி என்ற நாடகக்காரர்



மு.ராமசாமி என்ற நாடகப் பேராசிரியர் அரவாணிகள் துயரம் தீர்ப்பதற்காக ஒரு நாடகத்தை நடத்தினார் என்று என் அறை நண்பன் முத்துக்குமார் சொன்னார். அவர் ஐ.டி. செக்டாரில் வேலை பார்ப்பவர். முத்துக்குமார் போன்ற ஏராளமான மனிதர்களுக்கு வணிக பத்திரிகையை மேலோட்டமாக பார்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியத்தை கொடுப்பதாக இருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.


மு.ராமசாமி என்பவரை நவீன நாடகக்காரர் என்று சொல்வது உண்டு. அவர் ப்ரெக்ட் என்ற நாடகக்காரரை தமிழில் மொழி பெயர்த்தவர். அது படிக்கவோ புரிந்து கொள்ள முடியாது என்பது வேறு விஷயம். நான் ஒரு பத்திரிகைக்காக இலங்கை பேராசிரியர் மௌனகுருவிடம் நாடகம் பற்றி பேட்டி எடுத்தேன். மு.ராமசாமியின் அடிப்பொடி ஒருவர் ராமசாமியிடம் ‘ஒப்பினியன்’ கேட்க வேண்டும் என்று எடுத்துச் சென்றார்.


அந்த நேர்காணலில் தமிழ்நாட்டு நாடகக்காரர்கள் மீது வைத்த விமர்சனம்
மௌனகுருவுக்கும் அவருடைய மாணவர்களுக்கு உள்ள கருத்து வேறுபாட்டை ஜனநாயகமாக கூறிய கருத்துகளை வெட்டித்தள்ளி இருந்தார் மு. ராமசாமி. ஒரு பத்திரிகை சார்ந்த குழுவினரால் எந்த கருத்தும் சொல்லாமல் நான் அந்த பேட்டியில் கை வைக்கக்கூடாது என்ற தார்மீக பண்பு கூட இல்லாதவர் மு. ராமசாமி.


மேலும் மலைக்கோட்டை என்ற சினிமாவில் கதாநாயகனைப் பார்த்து ‘நீங்க என்ன ஜாதி?’ என்று கேட்பார் மு. ராமசாமி. அதற்கு முத்துராமலிங்கத் தேவர் படம் பதிலாக காண்பிக்கப்படும். அந்த காட்சி அமைப்பு அங்கு தேவையில்லாதது. தன் சுய ஜாதி அபிமானம் மு.ராமசாமியின் முகத்தில் பெருமிதமாக வெளிப்படும்.
எழுத்தாளர் அசோகமித்ரன் ‘அவுட்லுக்’ இதழில் பிராமணர்களைப் பற்றி எழுதியதிற்கும் நடந்த எதிர்வினைகளையும் எஸ்.ராமகிருஷ்ணன் குட்டிரேவதி பற்றி சினிமாவில் எழுதியதற்கு ஏற்பட்ட எதிர்வினைகள் மு.ராமசாமி நடித்த இந்த படத்திற்கு ஏன் எழவில்லை? பிற்படுத்தப்பட்ட சாதிய அதிகாரமும் உளவியலும்தான் காரணமாக இருக்க முடியும்.


இல்லையென்றால் சாதியத்தை ஒழிக்க வேண்டும் சாதியை புறந்தள்ள வேண்டும் என்ற முற்போக்காளர்கள் எல்லா சாதியிலும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள் முடங்கி போய் விட்டார்களா? அல்லது சமரசம் செய்து கொண்டார்களா? அல்லது சாதிக்கு சாதி அளவுகோல்கள் மாறுபடுகின்றனவா?
மு.ராமசாமி இப்போதும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறைத் தலைவராக இருக்கிறார். அவர் அரவாணிகளுக்காக செய்த நாடகம் அரசின் நிதி உதவியால் அல்லது பல்கலைக்கழக மானிய உதவியால் அல்லது மு.ராமசாமியின் சொந்த பணத்தில் செலவழிக்கப்பட்டதா என்றால் மு. ராமசாமியின் சொந்தப் பணத்தில் சொந்த முயற்சியால் நடத்தப்பட்டது என்று செய்தி தெரிவிக்கிறது.


அவர் அரசின் ஏதோ ஒரு துறையில் பணம் பெற்று இதை செய்தால் இந்த செய்திக்காக அரசாங்கம் தண்டிக்க வேண்டும். ஆனால் உண்மையில் சொந்த பணத்தில் தன் முயற்சியில் செய்தால் அரசு பாராட்ட வேண்டும்.


அரசு நடவடிக்கை எடுக்குமா? அரசு நடவடிக்கை எடுத்தால் முத்துக்குமார் போன்ற மனிதர்களுக்கு உண்மை விளங்கும்.

1 comment:

த.அரவிந்தன் said...

தொய்வு இல்லாமல் எழுதுங்கள் தோழர். தொடரட்டும் உங்கள் எழத்து பணி.